இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் மியான்மர் ராணுவம் !!

  • Tamil Defense
  • December 9, 2021
  • Comments Off on இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் மியான்மர் ராணுவம் !!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகள் கடந்த நவம்பர் 13ஆம் தேதி அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் கான்வாய் மீது கொடுர தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஒரு கட்டளை அதிகாரி அவரது மனைவி மற்றும் மகன் வேறு நான்கு வீரர்களும் வீர மரணம் அடைந்தனர்.

இதற்கு NSCN-K மற்றும் PLA ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றன. இந்த அமைப்புகளுக்கு மியான்மரில் முகாம்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மருடன் இந்தியா சுமார் 1600 கிலோமீட்டர் நீளம் கொண்ட கரடுமுரடான காடுகளும் மலைகளும் நிறைந்து காணப்படும் இதனை பயங்கரவாதிகள் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மியான்மரின் சாகியாங் பகுதியில் இத்தகைய பயங்கரவாத முகாம்களை தான் இந்திய ராணுவத்தின் சிறப்பு படைகள் குறிவைத்து தாக்கி 102 பயங்கரவாதிகளை கொன்றோழித்தனர்.

மியான்மரில் தற்போது ஆட்சியை கைப்பற்றி உள்ள ராணுவம் இந்த பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருகிறது காரணம் அங்கு போராடி வரும் மக்களை ஒடுக்க இந்த பயங்கரவாத அமைப்புகள் உதவி வருகின்றன.