
கடந்த 24ஆம் தேதியன்று மியான்மர் கடற்படையின் 74ஆவது ஆண்டு விழாவை ஒட்டி சீன தயாரிப்பு மிங் ரக நீர்மூழ்கி கப்பலை மியான்மர் படையில் இணைத்துள்ளது.
1974ஆம் ஆண்டு இந்த வகை நீர்மூழ்கிகளை சீனா தயாரித்து பயன்படுத்தி வந்தது தற்போது புதிய வகை நீர்மூழ்கிகளை இணைத்து வருவதால் இவற்றை படையில் இருந்து விலக்கி வருகிறது.
இந்த நிலையில் இந்த பயன்படுத்தப்பட்ட சீன தயாரிப்பு டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பலை UMS மின்யெ க்யாவ் தின் என பெயர் மாற்றம் செய்து மியான்மர் படையில் இணைத்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா ஏற்கனவே பயன்படுத்தி வந்த கிலோ ரக நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்கியதும் அதனை UMS மின்யெ தெய்ன்காத்து என பெயரிட்டு படையில் இணைத்து பயன்படுத்தி வருவதும்
இதனை தொடர்ந்து சீன அரசு மற்றும் மியான்மர் அரசு இடையே இந்தியாவிடம் இருந்து நீர்மூழ்கி கப்பல் வாங்கியதால் மோதல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.