
நவம்பர் மாதம் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையின் கர்னல் விப்லவ் த்ரிபாதி அவரது மனைவி மகன் மற்றும் நான்கு வீரர்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் RPF எனும் பிரிவினைவாத அமைப்பின் ஆயுதமேந்திய பிரிவான PLA அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.
தற்போது அந்த அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளை மியான்மர் ராணுவம் கைது செய்து இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்து உள்ளது.
ஒரு வருடம் முன்னர் மியான்மர் ராணுவம் நடத்திய ஆபரேஷன் சன்ரைஸ் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
தற்போது இந்திய விமானப்படையின் விமானம் மூலமாக இவர்கள் மியான்மரில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
இந்தியா கொண்டு வரப்பட்ட ஐந்து பயங்கரவாதிகளும் அடையாளம் தெரியாத இடத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.