2021: பாதுகாப்பு துறையின் ஏற்ற தாழ்வுகள் வருங்கால திட்டங்கள் !!

  • Tamil Defense
  • December 24, 2021
  • Comments Off on 2021: பாதுகாப்பு துறையின் ஏற்ற தாழ்வுகள் வருங்கால திட்டங்கள் !!

2021ஆம் ஆண்டு முடிவை நெருங்கி கொண்டு இருக்கிறது தற்போது இந்த வருடத்தில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகள் சவால்கள் பற்றி காணலாம்.

சீனா உடனான எல்லையோரம் தொடர்ந்து பதட்டமாகவே உள்ளது படையினர் தொடர்ந்து பனிகாலத்திலும் எல்லையோரம் பணியாற்றி வருகின்றனர்.

காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள காட்டில் ஒரு மாத காலம் பயங்கரவாதிகளுடன் தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்தது, இந்த ஆபரேஷனில் 9 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு விமானப்படை தளத்தில் ட்ரோன்கள் மூலமாக குண்டுவீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இதனையடுத்து தேசிய பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்கள் அதாவது மைனாரிட்டி மக்கள், பிற மாநில வியாபாரிகள் ஆகியோர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

வடகிழக்கு மாநிலங்களிலும் பிரச்சினைகள் ஏற்ப்பட்டன, ஒரு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் கர்னல் அவரது மனைவி மகன் மற்றும் 4 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இது போதாதென்று நாகலாந்து மாநிலத்தில் 21ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் தவறான உளவு தகவலின் அடிப்படையில் நடத்திய ஆபரேஷனில் 13 சிவிலியன்களும் 1 ராணுவ வீரரும் உயிர் இழந்தனர், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் முதலாவது கூட்டு படைகள் தலைமை தளபதி அவரது மனைவி மற்றும் 12 ராணுவத்தினர் ஊட்டி அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தனர், ஜெனரல் ராவத்தின் மரணம் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க பல்வேறு முன்னேற்ளங்களையும் நமது பாதுகாப்பு துறை கண்டுள்ளது அவற்றை பற்றியும் காணலாம்

36 ரஃபேல் போர் விமானங்களில் 33 இந்திய விமானப்படைக்கு டெலிவிரி செய்யபட்டு உள்ளன மீதமுள்ளவை விரைவில் டெலிவிரி ஆகிவிடும்.

ரஷ்யா முதலாவது எஸ்-400 அமைப்பை டெலிவரி செய்தமையால் பஞ்சாபில் முதலாவது எஸ்-400 படையணி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இது தவிர ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்த போது ஏகே-203 ரக துப்பாக்கிகளை உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடற்படையை பொருத்தவரை முதலாவது விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல் படையில் இணைந்துள்ளது. கரன்ஜ், வேலா, வாக்ஷீர் ஆகிய மூன்று ஸ்கார்பீன் ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகள் படையில் இணைந்துள்ளன.

ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் வெற்றிகரமாக இரண்டு கட்ட கடல் சோதனைகளை நிறைவு செய்து விரைவில் படையில் இணைய காத்திருக்கிறது.

வரும் வருடத்தில் ஹாம்மர் ஏவுகணைகள், ஹெரோன் ஆளில்லா விமானங்கள், டி72 மற்றும் டி90 டாங்கிகளுக்கான கவச எதிர்ப்பு குண்டுகள், ஸ்பைஸ் குண்டுகள் ஆகியவை வாங்கப்பட உள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு எல்லையோர பகுதிகளில் சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணியை எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு திறம்பட மேற்கொண்டு வருகிறது.

இந்த பணிகள் மற்றும் நவீனபடுத்துதல் மறுசீரமைப்பு ஆகியவற்றை திறம்பட வழிநடத்து அடுத்த கூட்டுபடைகள் தலைமை தளபதியை அடுத்த ஆண்டில் மத்திய அரசு நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.