லக்னோ விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போர் விமான டயர் திருட்டு !!

  • Tamil Defense
  • December 3, 2021
  • Comments Off on லக்னோ விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போர் விமான டயர் திருட்டு !!

லக்னோ விமானப்படை தளத்திற்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ தளவாடங்கள் கருவிகள் லாரி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த லாரியில் ஒரு மிராஜ்2000 ரக போர் விமானத்தின் ஐந்து டயர்களும் கொண்டு செல்லப்பட்டன. அப்போது லக்னோ நகரத்தில் வாகன நெரிசல் காரணமாக லாரி நகர முடியாமல் சிக்கி கொண்டது.

லாரியை ஏற்கனவே பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி போர் விமான டயரை திருடி சென்றுள்ளனர்.

திருட்டு நடைபெற்றதை அறிந்த லாரி ஒட்டுநர் உடனடியாக லக்னோ காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.