விரைவில் நடைபெற உள்ள பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் மிக முக்கிய சந்திப்பு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் !!

  • Tamil Defense
  • December 29, 2021
  • Comments Off on விரைவில் நடைபெற உள்ள பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் மிக முக்கிய சந்திப்பு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் !!

வருகிற ஜனவரி மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பாதுகாப்பு கொள்முதல் கமிட்டியின் மிக மிக முக்கியமான சந்திப்பு நடைபெற உள்ளது.இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தளவாடங்களை அடையாளம் கண்டு அவற்றின் வெளிநாட்டு இறக்குமதியை தவிர்ப்பதும்,

இந்தியாவில் தயாரிக்கப்படாத தளவாடங்களை வெளிநாட்டில் இருந்து அடையாளம் கண்டு இறக்குமதி அல்லது கூட்டு தயாரிப்பு முறையில் இந்தியாவில் தயாரிப்பதும் இந்த கமிட்டியின் மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது.

தற்போது இந்தியா போர் கப்பல்கள் டாங்கிகள் பிரங்கிகள் நீர்மூழ்கிகள் ஏவுகணைகள் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை தயாரித்தாலும் அதிநவீன போர் விமானங்கள் குறிப்பாக வானூர்திகள் மற்றும் கப்பல்களுக்கான என்ஜின்களை இறக்குமதி செய்யும் நிலை தான் உள்ளது.

இவற்றை சரி செய்ய பல்வேறு முடிவுகள் இந்த சந்திப்பில் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலர், முப்படை துணை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இதில் பங்கு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.