டெல்லி கொண்டுசெல்லப்படும் தளபதி ராவத் அவர்களின் திருவுடல்

குன்னூர் அருகே வானூர்தி விபத்து தொடர்பாக அமைச்சர் இராஜ்நாத் சிங் இன்று இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க உள்ளார்.

இன்று மாலை தளபதி ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அவர்களின் உடல் தலைநகர் கொண்டு செல்லப்பட உள்ளது.டெல்லி கன்டோன்மென்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கு முன்பு மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் வீரவணக்கம் செலுத்தப்பட உள்ளது.

இதில் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்த முப்படை தளபதிகளும் இன்று மெட்ராஸ் ரெஜிமென்ட் செல்கின்றனர்.