த்ருவ் வானூர்திகளை வாங்க உள்ளதா பிலிப்பைன்ஸ் ?

  • Tamil Defense
  • December 2, 2021
  • Comments Off on த்ருவ் வானூர்திகளை வாங்க உள்ளதா பிலிப்பைன்ஸ் ?

இந்திய கடலோர காவல்படைக்காக ஹால் நிறுவனம் உருவாக்கிய துருவ் இலகுரக ஹெலிகாப்டரின் கடல்சார் ரகத்தை பிலிப்பைன்ஸ் வாங்க மதிப்பீடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு ஆயுத தளங்களை உருவாக்குவதன் பலன்களை விளக்கும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) பிலிப்பைன்ஸுக்கு குறைந்தபட்சம் ஏழு துருவ் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர்கள் (ஏஎல்எச்) மற்றும் எட்டு டோர்னியர் 228 விமானங்கள், இந்திய அரசின் கடன் மூலம் விற்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் கோரிக்கையின் பேரில் பெங்களூரில் ஹால் உருவாக்கிய துருவ் ஏஎல்எச் இன் கடல்சார் ரகத்தை பிலிப்பைன்ஸ் ஆராய்ந்து வருகிறது.

பிலிப்பைன்ஸ் உடன் ஒப்பந்தங்கள் ஏற்பட்டால் அது 3,000 கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும், இது இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ஆக இருக்கும்.
இரண்டு விமானங்களும் சிறப்பாகச் செயல்பட்டு அதிக சேவைத்திறன் விகிதங்களை வழங்கினால், மேலும் ஏற்றுமதி ஆர்டர்கள் பெற வாய்ப்புள்ளது.