இனிப்புகள் , ராணுவத்தை விரும்பியவர் சீனாவை எச்சரிக்கையுடனும் அணுகிய ஜெனரல் ராவத் !!

ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் வீரர்கள் உட்பட 11 பேர் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர்.

ஜெனரல் ராவத் இனிப்புகளை மிகவும் விரும்பும் நபர் வீரர்கள் அவரை பற்றி கூறும்போது எப்போதும் மகிழ்சியாக இருக்கும் குணம் கொண்டவர் எளிமையானவர் கர்வம் இல்லாதவர் என்கின்றனர்.

அவரது ராணுவ பணி மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளை கொண்டது. பாகிஸ்தான் உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் பணியில் இருக்கும்போது உருண்டு வந்த கல் அவரது காலை நசுக்கியது.

ஆனாலும் சிகிச்சை பெற்று வந்த தனது பணியை தொடர்ந்தார்.ஊனமுற்ற போர் வீரர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ஏற்க மறுத்து தனது உடல்தகுதியை நிருபித்தார்.

அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக இருந்தார் கோல்ஃப் விளையாடுவதை அதற்காகவே நிறுத்தியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மியான்மர் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் டோக்லாம் பிரச்சினை கல்வான் பிரச்சினை ஆகியவற்றை கையாண்ட விதம் பலரை ஆச்சரியபடுத்தியது என்றுமே சீனாவை தான் இந்தியா இலக்காக கருத வேண்டும் என்றார்.

சீனாவை தான் எதிர்க்க தயாராக வேண்டும் என்றவர் லடாக்கில் பாங்காங் ஸோ ஏரிக்கரையோரம் உள்ள அனைத்து மலைகளையும் அப்படியே நியாபகம் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

அரசியல் தலைமை முப்படை தளபதிகள் என யாருடனும் தனது கருத்தை அஞ்சாமல் முன் வைத்தவர் தேசம் எனும்போது தனது முழு திறனையும் வெளிபடுத்தியவர்.

தற்போது அவரது இறப்பு அவர் விட்டு சென்ற நாட்டின் ராணுவத்தை சீரமைத்து நவீனப்படுத்தும் பணிகளில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையாகாது.