
27ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய Sikhs For Justice என்ற அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமைப்பை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஜெர்மனியின் எர்ஃபர்ட் நகரில் கைது செய்யப்பட்டு உள்ளான்.
ஜஸ்வீந்தர் சிங் முல்தானி எனும் அந்த பயங்கரவாதியை இந்தியா கொண்டு வருதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவனை இந்தியாவுக்கு ஜெர்மனி அரசு நாடு கடத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவன் பாகிஸ்தானில் உள்ள தனது கூட்டாளிகள் மூலமாக இந்திய பகுதிக்குள் வெடி மருந்து துப்பாக்கிகள் கையெறி குண்டுகள் ஆகியவற்றை அனுப்பியது தெரிய வந்துள்ளது
மேலும் இந்த வகையில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் பின்னர் அந்த தகவல்களின் அடிப்படையில் ஜெர்மனி காவல்துறையினர் இவனை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.