சராசரியாக இருப்பதில் தவறேதும் இல்லை க்ருப் கேப்டன் வருண் சிங்கின் கடிதம் !!

  • Tamil Defense
  • December 11, 2021
  • Comments Off on சராசரியாக இருப்பதில் தவறேதும் இல்லை க்ருப் கேப்டன் வருண் சிங்கின் கடிதம் !!

குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 13 பேர் உயரிழந்த நிலையில் அவர்களுடன் பயணித்த விமானப்படையின் க்ருப் கேப்டன் வருண் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது கடந்த செப்டம்பர் மாதம் அவர் தனது பயின்ற பள்ளியின் முதல்வருக்கு மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.

அதில் சராசரியாக இருப்பதில் தவறேதும் இல்லை நானும் விளையாட்டு கல்வி என எல்லாவற்றிலும் சராசரியாக தான் இருந்தேன்.

தேசிய பாதுகாப்பு அகாடமிக்கு செல்வதற்கான தகுதிகள் எனக்கு இல்லாமல் இருந்தது ஆனால் அங்கு சென்று பயிறசி முடித்தேன்.

பிறகு விமானப்படை அகாடமியில் இணைந்த பிறகு பறப்பது மீதான எனது விருப்பத்தை புரிந்து கொண்டேன் என்னால் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமோ அவ்வளவு சிறப்பாக செயல்பட முடிவு செய்தேன்.

அதன் பிறகு எனது வாழக்கை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது பல்வேறு உயரங்களை தொட்டேன், உங்களது மதிப்பெண்கள் உங்களது சாதனைகளை தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

க்ருப் கேப்டன் வருண் சிங் தனது தேஜாஸ் போர் விமானத்தை விபத்திலிருந்து காப்பாற்றியதால் வீரதீரத்திற்கான ஷவுர்ய சக்ரா விருதை பெற்றார்.

மேலும் மிக கடினமான நான்கு நிலைகள் கொண்ட சோதனை விமானி தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தார் 59 பேரில் தேர்ச்சி பெற்ற எழுவரில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.