சிரிய துறைமுகத்தை தாக்கிய இஸ்ரேலிய போர் விமானங்கள்

  • Tamil Defense
  • December 7, 2021
  • Comments Off on சிரிய துறைமுகத்தை தாக்கிய இஸ்ரேலிய போர் விமானங்கள்

சிரியாவின் லடாக்கியா துறைமுகத்தை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதாகவும் இதனால் அங்கு பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக சிரிய மீடியா தகவல்கள் வெளியிட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு தேவையான அனைத்து இறக்குமதிகளும் இந்த துறைமுகம் வழியாக தான் சிரியாவிற்குள் நுழையும் என்பதால் இந்த தாக்குதல் மிகவும் அரிதானது என சிரிய மீடியா கூறியுள்ளது.

துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களை குறிவைத்து இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக சிரிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எந்த விதமான தகவலையும் தற்போது வெளியிடவில்லை.