சீனாவுக்கு சட்டவிரோதமாக ஏவுகணை சப்ளை செய்த நிறுவனங்கள் மீது இஸ்ரேலிய அரசு அதிரடி நடவடிக்கை !!

சீனாவுக்கு சட்டவிரோதமாக க்ரூஸ் ஏவுகணைகளை சப்ளை செய்த இஸ்ரேலிய நிறுவனங்கள் மற்றும் அதற்கு உதவிய தனி நபர்கள் மீது இஸ்ரேலிய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இஸ்ரேலிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில் மூன்று நிறுவனங்கள் மற்றும் ஏழு தனி நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த சட்டவிரோத ஒப்பந்தம் நடைபெற காரணமாக இருந்த நபர் எஃப்ராயிம் மனாஷே எனும் ட்ரோன் நிறுவன அதிபர் ஆவார் இரண்டு வருடங்கள் முன்னர் இவரை கண்காணிக்க தொடங்கி தற்போது கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

சட்ட விரோதமாக ஏவுகணைகள் தயாரித்து, சோதனை செய்து, ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றுமதி செய்து அதற்கான பணத்தை சட்ட விரோதமாக பெற்று கொண்டது என பல்வேறு வகையான குற்றங்களை புரிந்துள்ளனர்.

குறிப்பாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் சோதனை நடத்தியது உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயலாகவும்,

சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் சட்ட விரோத ஆயுத ஏற்றுமதி மூலமாக நாட்டின் பாதுகாப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆனால் எது எப்படியோ சீன தரப்பு இந்த நிகழ்வுகளுக்கு எந்தவிதமான எதிர் வினையும் காட்டாமல் மவுனமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.