இந்திய கடற்படையின் kA-28 ஹெலிகாப்டர்களுக்கு இஸ்ரேலிய கருவிகள் !!
1 min read

இந்திய கடற்படையின் kA-28 ஹெலிகாப்டர்களுக்கு இஸ்ரேலிய கருவிகள் !!

இந்திய கடற்படை பயன்படுத்தி வரும் 10 Kamov ka-28 ரக ஹெலிகாப்டர்களில் இஸ்ரேலிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அதிநவீன கருவிகள், சென்சார்கள், ரேடார், மின்னனு போர்முறை உதவி அமைப்பு, தகவல் தொடர்பு உளவு அமைப்பு, சோனார், கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கருவிகள் அடங்கும்.

இதன்படி ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரோஸ்போரான் எக்ஸ்போர்ட் நிறுவனம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவின் குமெர்தாவ் நகருக்கு ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்படும்

அங்கு ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கான மேம்பாட்டு பணிகள் நடைபெறும் அந்த பணிகள் முடிவுடைந்த பிறகு இந்திய கடற்படையின் தேகா வானூர்தி தளத்திற்கு அந்த ஹெலிகாப்டர்கள் வரும்.

அங்கு இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் வல்லுனர் குழு வந்து இஸ்ரேலிய கருவிகளை இணைத்து தருவர் அதன்பின் ரஷ்ய வல்லுனர்கள் முன்னிலையில் சோதனை நடைபெறும்.

அதன்பிறகு இந்த காமோவ்-28 ரக கடல்சார் ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் மீண்டும் சேவையில் இணையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.