
ISIS பயங்கரவாத அமைப்பில் 66 இந்திய பயங்கரவாதிகள் உள்ளதாக அமெரிக்க அரசின் வருடாந்திர பயங்கரவாத செயல்பாடு குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது நவம்பர் மாதம் வரையிலான கணக்கு எனவும் 2020ஆம் ஆண்டு எந்த பயங்கரவாதிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக அதிகரித்துள்ள இந்திய அமெரிக்க ஒத்துழைப்பு காரணமாக பயங்கரவாதிகளின் பயணங்கள் வெற்றிகரமாக முடக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.