
இந்தியா எஸ்-500 ப்ரோமித்தியஸ் வான் பாதுகாப்பு அமைப்பை பெறும் முதலாவது வெளிநாட்டு கஸ்டமராக இருக்கலாம் என ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் கூறியுள்ளார்.
இவரது இந்த பேச்சு தற்போது இந்தியா முதலாவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை பஞ்சாபில் செயல்படுத்தி உள்ள நிலையில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த எஸ்-500 ப்ரோமித்தியஸ் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கும் எஸ்-400 அமைப்பானது 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தான் தாக்கும்.
மேலும் எஸ்-500 ப்ரோமித்தியஸ் அமைப்பானது ஹைப்பர்சானிக் ஏவுகணைகள், அமெரிக்க எஃப்22 , எஃப்35 போன்ற அதிநவீனமான ஸ்டெல்த் இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டதாகும்.
எது எப்படியோ ஒர் மூத்த இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி தற்போது தான் எஸ்-400 படையில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் ஆகவே தற்போது எஸ்-500 அமைப்பை வாங்குவது பற்றி எந்த கருத்தும் கூற முடியாது என்றார்.