இரஷ்யாவை விடுத்து மேற்கு நாடுகளிடம் போர்விமானங்கள் வாங்கும் இந்தோனேசியா

  • Tamil Defense
  • December 24, 2021
  • Comments Off on இரஷ்யாவை விடுத்து மேற்கு நாடுகளிடம் போர்விமானங்கள் வாங்கும் இந்தோனேசியா

இந்தோனேசியா ரஷ்ய விமானங்களை வாங்குவதை கைவிட்டு அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு நாடுகளிடம் இருந்து விமானங்கள் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்ய போர் விமானங்களை வாங்கும் முயற்சியில் தோல்வியை ஒப்புக்கொண்ட இந்தோனேசியா, இப்போது boring F-15EX Eagle II மற்றும் Dassault Rafale டஸ்ஸால்ட் ரஃபேல் ஆகிய ஏதேனும் ஒரு விமானத்தை தேர்வு செய்யும் என்று நாட்டின் விமானப்படை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிற்கு அருகிலுள்ள ஹலிம் பெர்டனகுசுமா விமான தளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஏர் சீஃப் மார்ஷல் ஃபட்ஜார் பிரசெட்டியோ, இந்தோனேசியா 4.5 தலைமுறை நடுத்தர எடை அல்லது கனரக போர் விமானத்தை வாங்க உள்ளதாக கூறினார்.

அமெரிக்க எப்-15இஎக்ஸ் மற்றும் பிரெஞ்சு ரஃபேல் ஆகியவற்றுக்கான தேர்வுகள் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து செய்யப்பட்டதாக அவர் கூறினார், பட்ஜெட்டைப் பொறுத்து இந்தோனேசியா இரண்டு முதல் மூன்று ஸ்க்வாட்ரான்கள் மதிப்புள்ள போர் விமானங்களை வாங்க உள்ளது.