பெண் வழக்கறிஞருக்கு இந்தோ திபெத் எல்லை காவல்படை எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • December 4, 2021
  • Comments Off on பெண் வழக்கறிஞருக்கு இந்தோ திபெத் எல்லை காவல்படை எச்சரிக்கை !!

தில்லியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் இந்திய தரைப்படை மற்றும் துணை ராணுவப்படை அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு அதனை பயன்படுத்தி,

தனக்கு தேவையான தகவல்கள், பணியிட மாறுதல் மற்றும் இதர காரியங்களை நடத்தி வருவதாகவும் இவரால் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூத்த அதிகாரிகளுடன் உடல் ரீதியாகவோ அல்லது வேறு ஏதேனும் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு அதற்கேற்ப மிரட்டி தனது வேலைகளை நடத்துகிறார்.

இவர் குறைந்த காலத்தில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம் பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் மூத்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவருடன் அமர்நாத் யாத்திரை செல்ல முயன்றதும் பின்னர் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால் திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பெண்மணி வழக்கமாக தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும்போது தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருவதாகவும் பொய் சொல்லி பழகி உள்ளார்.

மேலும் உத்தராகன்ட், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் தில்லி ஆகிய இடங்களில் பணிபுரியும் ராணுவத்தினருடன் பழக்கம் ஏற்படுத்தி கொள்ள தீவிரமாக முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.