ஹைதராபாத் நகரில் அமெரிக்க எஃப்16 போர் விமானத்திற்கான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இறக்கைகள் தயாரிப்பு !!

  • Tamil Defense
  • December 8, 2021
  • Comments Off on ஹைதராபாத் நகரில் அமெரிக்க எஃப்16 போர் விமானத்திற்கான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இறக்கைகள் தயாரிப்பு !!

அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் டாடா லாக்ஹீட் மார்ட்டின் ஏரோ ஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (TLMAL) நிறுவனத்தை தனது வருங்கால கூட்டாளியாக அங்கீகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து Tata Lockheed Martin Aerostructures Limited (TLMAL) நிறுவனத்தின் ஹைதராபாத் தொழிற்சாலையில் எஃப்-16 போர் விமானத்திற்கான முதல் செட் இறக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கான விழாவில் தெலுங்கானா மாநில தொழில்துறை அமைச்சர் கே டி ராம ராவோ லாக்ஹீட் மார்ட்டின் இந்திய பிரிவு அதிகாரிகள் மற்றும் டாடா நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் வழக்கமான இறக்கைகள் போலில்லாமல் இந்த இறக்கைகளை கழற்றி மாற்றி கொள்ள முடியும் ஆனால் இதனை வடிவமைத்து தயாரிப்பது மிகவும் கடினமாகும் அந்தளவுக்கு நவீனத்துவம் மற்றும் நுண்ணிய திறன்கள் அவசியமாகும்.