இந்தியாவின் புதிய அணுசக்தி திட்டம்; 2024 வாக்கில் 21 புதிய அணு உலைகள் !!

  • Tamil Defense
  • December 6, 2021
  • Comments Off on இந்தியாவின் புதிய அணுசக்தி திட்டம்; 2024 வாக்கில் 21 புதிய அணு உலைகள் !!

இந்தியா ஒர் முற்றிலும் புதிய அணுசக்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது மாசில்லாமல் மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதன் படி 2024ஆம் ஆண்டு வாக்கில் 9 புதிய மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 12 அணு உலைகள் நாடெங்கும் செயல்பாட்டில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் சுமார் 9000 மெகாவாட் எனவும் முதலாவது அணு உலை ஹரியானா மாநிலம் கோரக்பூரில் வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐந்து புதிய அணு உலைகளுக்கான இடங்களின் தேர்வும் மற்றொரு புறம் நடைபெற்று வருகிறது என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.