
அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா ஃபிரான்ஸ் போன்ற பல நாடுகள் ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தாலிபான்களின் அரசை அங்கீகரிக்க மறுத்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியமும் ஆஃப்கானிஸ்தானில் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் எதுவும் காண முடியாத நிலையில் தாலிபான்களின் அரசை அங்கீகரிக்க மறுத்துள்ளது.
இவை அனைத்திற்கும் இந்தியாவின் ராஜதந்திர அழுத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணம் என கூறப்படுகிறது.ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நாள் முதலாகவே இந்தியா தனது நடவடிக்கைகளை துவங்கியதாக தெரிகிறது.
குறிப்பாக அந்நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும்.ஆனால் தாலிபான்களின் அரசை அங்கீகரிக்க கூடாது என்ற தனது நிலைபாட்டை தான் சர்வதேச அளவில் இந்தியா வலியுறுத்தி வருகிறது.
அந்த நிலையை தான் தற்போது பரவலாக உலக நாடுகள் எடுத்துள்ளன குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆஃப்கன் பிரதிநிதி ஜென் நிக்கல்சன் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.