
பாதுகாப்பு துறை இணை அமைச்சர் திரு. அஜய் பாட் நாடாளுமன்றத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களின் இணைப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்,
அப்போது அவர் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டருக்கான ஆரம்பக்கட்ட இயங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ,ஆகவும் விரைவில் தயாரிப்பு பணிகள் துவங்கும் எனவும்,
2022-2023 வாக்கில் நான்கு லிமிடெட் சீரீஸ் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் எனவும், 2023-2024 வாக்கில் 8 லிமிடெட் சீரீஸ் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் இவை இந்திய விமானப்படை மற்றும் தரைப்படை இடையே சம எண்ணிக்கையில் பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ரஷ்ய கா226டி ரக ஹெலிகாப்டர்கள் தற்போது உள்ள சீட்டா மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்களை மாற்ற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.