விக்ராந்த் கப்பலை பார்வையிட்ட ஜனாதிபதி உள்நாட்டு கப்பல் கட்டுமான திறன்களை பாராட்டினார் !!

  • Tamil Defense
  • December 24, 2021
  • Comments Off on விக்ராந்த் கப்பலை பார்வையிட்ட ஜனாதிபதி உள்நாட்டு கப்பல் கட்டுமான திறன்களை பாராட்டினார் !!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொச்சியில் உள்ள எர்ணாகுளம் கால்வாயில் தென்னக கடற்படை நிகழ்த்தி காட்டிய நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

இந்த நடவடிக்கைகள் பயிற்சியில் இந்திய கடற்படையினர் போரின் போது போர் கப்பல்கள் இயங்கும் முறைகளை நிகழ்த்தி காட்டினர்.

அப்போது ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை பார்வையிட்டார் அவர் விக்ராந்தை பார்வையிடுவது இதுவே முதல் முறையாகும் அப்போது படையில் இணைக்கும் விஷயங்கள் அவருக்கு விளக்கப்பட்டது.

இது குறித்து பிதிவிட்ட அவர் உள்நாட்டு கப்பல் கட்டுமான திறன்களை நோக்கிய இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டுமான தளம் ஆகியற்றின் அர்ப்பணிப்பை கண்டு திருப்தி அடைவதாக பாராட்டினார்.

இந்த 40 நிமிட பயிற்சியில் கடற்கரை குண்டுவீச்சு, உளவு, கண்காணிப்பு, தாக்குதல், போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டரின் திறன்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன.