
இந்திய கடற்படையின் மேற்கு பிராந்திய கட்டளையகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் ஆவார். இவர் கல்வான் மோதலுக்கு பிறகான இந்திய கடற்படையின் நடவடிக்கைகள் பற்றி பேசினார்.
அப்போது அவர் இந்திய கடற்படை மிகவும் வலுவான ஆழமான பங்காற்றியதாகவும் ஆனால் இந்த பிரச்சினையில் அதிகம் மறக்கப்பட்ட படை கடற்படை தான் எனவும் குறிப்பிட்டார்.
இந்திய கடற்படை கடலில் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவுக்கு வலு சேர்த்தன.மேலும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பலத்த விளைவுகளை ஏற்படுத்தியது என்றார்.
மேலும் பேசுகையில் இந்திய கடற்படை மேற்கொண்ட வலுவான நடவடிக்கைகள் பற்றி பேச மறுத்துவிட்டார். சில விஷயங்களை பொது வெளியில் பேச முடியாது ஆனால் இந்திய கடற்படை மிகப்பெரிய பங்காற்றியது உண்மை என கூறினார்.