
பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசிற்கு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது அதற்கான அரசின் பதில்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி நாடாளுமன்ற நிலைக்குழுவானது மூன்று விமானந்தாங்கி கப்பல்கள் இந்திய கடற்படைக்கு தேவை என குறிப்பிட்டுள்ளது.
அதாவது இரண்டு கப்பல்கள் நாட்டின் இரண்டு புறமும் தேவை அவற்றில் ஒன்று பராமரிப்பு பணிகளுக்காக செல்லும்போது மற்றொரு கப்பல் அந்த இடைவெளியை நிரப்பியாக வேண்டும்.
மேலும் குளிர்கால ஆடைகள் குண்டு துளைக்காத கவச உடைகள் மற்றும் எல்லையோர சாலை பணிகள் குறித்தும் பல்வேறு பரிந்தரைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டு உள்ளன.
மூன்று விமானந்தாங்கி கப்பல்கள் பற்றிய பரிந்துரை சார்ந்த ஊடக கேள்வி ஒன்றிற்கு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.