கடல் கொள்ளையர்களை தாக்க இந்திய கடற்படை பயன்படுத்தி வரும் அதிநவீன இஸ்ரேலிய ஆயுதம் !!
கடந்த மாதம் இந்திய கடற்படை தனது மிகவும் அதிநவீனமான நாசகாரி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தை படையில் இணைத்து கொண்டது அனைவரும் அறிந்ததே.
இந்த ரக கப்பல்களில் ஒரு அதிநவீனமான இஸ்ரேலிய ஆயுதம் ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது இதன் பெயர் SRCG ஆகும் இதனுடன் ஒரு நவீன கேமிராவும் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த துப்பாக்கி நிலையான மேடை ஒன்றில் பொருத்தப்பட்ட ரிமோட் முலமாக இயக்கப்படும் துப்பாக்கி ஆகும் இலக்குகளை அடையாளம் அந்த அதிநவீன கேமிரா உதவும்.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான திருச்சி ஆயுத தொழிற்சாலை இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்த அதிநவீனமான ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.
இதுவரை இத்தகைய 25 SRCG ஆயுத அமைப்புகள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் அவை படிப்படியாக கப்பல்களில் பொருத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 12.7 மில்லிமீட்டர் துப்பாக்கியானது ஒரு நிமிடத்தில் சில நூறு ரவுண்டுகளை சுட முடியும் மிகச்சிறிய இலக்குகளை கூட மிக துல்லியமாக குறிவைத்து தாக்க உதவும் எனவும் குறிப்பாக கடல்கொள்ளையர்களை ஒழிக்க மிகவும் உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.