இந்தோ பசிஃபிக்கில் எழும் சவால்களை எதிர்கொள்ள இந்திய கடற்படைக்கு நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது !!

ஆசியாவில் மிக முக்கியமான சக்திகளில் ஒன்றாக இந்தியா எழுச்சி பெற்றுள்ள நேரத்தில் இந்திய கடற்படையின் முக்கியத்துவம் அதற்கேற்ப அதிகரித்துள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் மிக வலிமையான நிலையில் உள்ள இந்திய கடற்படை தற்போது மிகப்பெரிய பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுகொண்டு செயல்படும் நிர்பந்தத்தில் உள்ளது என்றால் மிகையாகாது.

கடற்படை என்றாலே அதிகமாக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் படையாகும். அதுவும் தற்போதைய காலகட்டத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சீன கடற்படை கப்பல்கள் மட்டுமின்றி சீன மீன்படி மாஃபியா கும்பல்களின் கலன்கள் மற்றும் சீனாவின் கடல்சார் ஆய்வு கலன்களையும் பரந்த இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிக்க தொழில்நுட்பம் அத்தியாவசியமாகிறது.