
இந்திய கடற்படை நாடு முழுவதும் கடற்படை வாரவிழாவை கொண்டாடி வருகிறது இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளமானது,
அதையொட்டி அமைந்துள்ள ஆத்தார் கிராம பஞ்சாயத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது இதனை தளத்தின் கட்டளை அதிகாரி கமோடர் ஆர் வினோத் குமார் ஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் ஆரம்பித்து வைத்தார்.
இதில் 51 கிராம மக்களுக்கு பெருமாச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் உடல்நல பல் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.
பின்னர் டெங்கு மலேரியா கொரோனா ஆகிய நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.