அட்மிரல் ஆர் ஹரி குமார் இந்தியக் கடற்படை சீனாவின் நடவடிக்கைகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றது என கூறியுள்ளார்.
சீனாவிற்கும் அதன் விரிவாக்க எண்ணங்களுக்கும் வலுவான செய்தியை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார் கூறியுள்ளார். இந்திய கடற்படை இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் முழு நம்பிக்கை கொண்டுள்ளது மேலும் நாடு எதிர்கொள்ளும் சாத்தியமான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள புதிய தளவாடங்களை கையகப்படுத்துவதிலும் முனைப்புடன் உள்ளது.
கடற்படை தினத்தை முன்னிட்டு ஒரு செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அட்மிரல் ஆர் ஹரி குமார் இந்திய கடற்படை அண்டை நாட்டின் நடவடிக்கைகள் நெருக்கமாக பார்த்த வருகின்றன என்று கூறினார்.
சீனா கடந்த சில வருடங்களில் 110க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை கட்டியுள்ளது என அறிவோம் எனினும் இந்தியாவின் கடல் எல்லைகளை திறன் பட இந்திய கடற்படை பாதுகாக்கும் என தளபதி கூறியுள்ளார்.
2008 முதல் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனினும் இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் இவற்றை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என பேசியுள்ளார்.