கூட்டு பயிற்சிக்காக மாலத்தீவு சென்ற இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • December 6, 2021
  • Comments Off on கூட்டு பயிற்சிக்காக மாலத்தீவு சென்ற இந்திய தரைப்படை !!

மாலத்தீவு ராணுவத்துடன் நடைபெறும் வருடாந்திர எகுவரின் கூட்டு போர் பயிற்சிக்காக இந்திய தரைப்படை அணி மாலத்தீவு சென்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பூனேவில் இது நடைபெற்றது.

மாலத்தீவு நாட்டில் உள்ள காது தீவில் இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை இந்த கூட்டு போர் பயிற்சிகள் நடைபெற உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சி அடக்குதல், கடல்சார் பயங்கரவாத ஒழிப்பு விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும் என தரைப்படை செய்தி தொடர்பாளர் கூறினார்.