உலக தரம் வாய்ந்த இரவு சண்டை வசதிகளை பெற உள்ள இந்திய வீரர்கள் !!

  • Tamil Defense
  • December 27, 2021
  • Comments Off on உலக தரம் வாய்ந்த இரவு சண்டை வசதிகளை பெற உள்ள இந்திய வீரர்கள் !!

தற்போது சர்வதேச எல்லையோரம் மற்றும் எல்லை கட்டுபாட்டு கோடு ஆகிய பகுதிகளில் பணிபுரியும் வீரர்கள் ஜெர்மன் அமெரிக்க கூட்டு தயாரிப்பான ஸிக்-716 சண்டை துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட இன்சாஸ் துப்பாக்கி மற்றும் பிரபல ரஷ்ய தயாரிப்பான ஏகே-47 ஆகியவற்றை மாற்றுவதற்கு தான் இந்த அதிநவீன ஸிக்-716 துப்பாக்கிகள் வாங்கப்பட்டன.

தற்போது நமது படையினருக்கு இரவு நேரத்தில் எதிரிகளை திறம்பட அடையாளம் கண்டு அவர்களை தாக்குவதற்கு உதவி புரியும் உலக தரம் வாய்ந்த இரவில் சண்டையிட உதவும் தொழில்நுட்பங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Image Intensifier எனப்படும் அதிநவீன 29,790 பார்வை கருவிகளை சுமார் 1410 கோடி ருபாய் மதிப்பில் வாங்க பாதுகாப்பு செயலர் தலைமையிலான முப்படை துணை தளபதிகளை உள்ளடக்கிய பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி ஒப்புதலை அளித்துள்ளது.

இந்த இரவு பார்வை கருவிகள் இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட உள்ளன மேலும் அவை ஜம்மு காஷ்மீர் லடாக் பாகிஸ்தான் எல்லையோரம் ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர தரைப்படையின் வான் பாதுகாப்பு படைக்கு 1600 கோடி ருபாய் மதிப்பிலான 40 தாக்குதல் கட்டுபாட்டு ரேடார்கள் வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.