
இந்திய தரைப்படை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய அதிநவீன டாங்கி எதிர்ப்பு எதிர்ப்பு கண்ணிவெடியை பெற உள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையோரங்களில் அந்நாட்டு படைகள் அத்துமீறினால் அதனை தடுக்கும் வகையில் முதலாவது பாதுகாப்பு அரணாக இவை செயல்படும் என்றால் மிகையாகாது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள இந்த கண்ணிவெடிகள் இந்திய தரைப்படையின் பொறியாளர்கள் படைப்பிரிவில் இணைக்கப்பட உள்ளன.
வைபவ் மற்றும் விஷால் என பெயரிப்பட்டுள்ள இந்த அடுத்த தலைமுறை டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளின் சோதனைகள் இந்திய தரைப்படையால் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.