
இந்திய தரைப்படை முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட வீரர்கள் எதிர்ப்பு கண்ணிவெடியை படையில் இணைக்க உள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்து தயாரித்த நிபுன், உல்கா மற்றும் பார்த் ஆகிய அடுத்த தலைமுறை அதிநவீன கண்ணிவெடிகள் தான் இவை.

ஏற்கனவே நமது படைகளால் பயன்படுத்தி வரப்படும் M14 டோபாப்பர், M16 ஜம்பிங் ஜாக் மற்றும் M18 க்ளேமோர் ஆகிய வெளிநாட்டு கண்ணிவெடிகளுக்கு இவை மாற்று என கூறப்படுகிறது.