
இந்திய தரைப்படை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் உதவியோடு ஒரு அதிநவீனமான க்வாண்டம் கணிணி ஆய்வகத்தை மோவ் நகரில் அமைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மோவ் நகரில் உள்ள ராணுவ தொலை தொடர்பு பொறியியல் கல்லூரியில் தான் இந்த எதிர்கால தொழில்நுட்பம் பற்றிய ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனுடன் இந்திய தரைப்படை ஒரு Artificial Intelligence மையத்தையும் இங்கு அமைத்துள்ளது இந்த இரண்டுமே ஆய்வை ஊக்கபடுத்தவும் பயிற்சி அளிக்கவும் அமைக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அதை போலவே சைபர் போர் முறைகளிலும் ராணுவத்தினருக்கு அதிநவீனமான சைபர் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும். ஆய்வகங்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.