
இந்திய ராணுவம் மலைகள், காடுகள், சமவெளிகள், பாலைவனம் ஆகிய பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய இடைத்தூர மிதவை குண்டுகளை வாங்க திட்டமிடுகிறது.
தற்காலத்தில் உள்ள போர் முறைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இத்தகைய துல்லிய தாக்குதல் மிதவை குண்டுகளை இந்திய ராணுவம் வாங்கி பயன்படுத்த திட்டமிடுகிறது.
இவை அடிப்படையில் ஆளில்லா விமானங்களாகும், நிலையான பாதுகாப்பான இலக்குகளை உடனுக்குடன் களத்திலேயே அடையாளம் கண்டு பின்னர் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட வேண்டும் எனவும் இத்தகைய 10 தொகுதி மிதவை குண்டுகளை முதல்கட்டமாக தயாரித்து வழங்க வேண்டும் என்பதும் ராணுவத்தின் நிபந்தனை ஆகும்.
மேலும் ராணுவம் முன்வைத்துள்ள தகுதிகளாவன,
இயக்க வரம்பு – 40 கிலோமீட்டர், துல்லியத்தன்மை – 5 மீட்டருக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும், 4 கிலோமீட்டர் உயரத்தில் தொடர்ந்து 2 மணி நேரம் பறக்க வேண்டும்.
8 கிலோ எடையிலான வெடிகுண்டை சுமக்க வேண்டும், கவச எதிர்ப்பு மற்றும் உயர் திறன் வெடிகுண்டுகளை சுமக்க வேண்டும், 1 கிலோமீட்டர் உயரத்தில் இலக்கின் மீது குறிவைத்து பறக்க வேண்டும் ஆகியவை நிபந்தனைகள் ஆகும்.