
நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் நடைபெற்ற தாக்குதலில் 14 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் இதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டார் இதனை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் பிரச்சினை வெடித்தது.
இதனை தொடர்ந்து இந்திய ராணுவம் மேஜர் ஜெனரல் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வருகிறது அவ்வப்போது மாநில அரசின் விசாரணை குழுவுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகலாந்து பொதுமக்களுக்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறோம்
நீண்ட காலமாக நாகலாந்து மக்கள் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் ஏதேனும் வீடியோ அல்லது புகைப்பட ஆதாரங்கள் இருந்தால் எங்களுக்கு தந்து உதவுங்கள் என கூறியுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வீரர்கள் அனைவரும் தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.