இந்திய ரஷ்ய 2+2 சந்திப்பில் வடக்கில் எல்லையோரம் நடைபெறும் அத்துமீறல் குறித்து பேசிய இந்தியா !!

  • Tamil Defense
  • December 7, 2021
  • Comments Off on இந்திய ரஷ்ய 2+2 சந்திப்பில் வடக்கில் எல்லையோரம் நடைபெறும் அத்துமீறல் குறித்து பேசிய இந்தியா !!

இந்திய ரஷ்ய வெளியுறவு மற்றும்பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்ட 2+2 சந்திப்பு தலைநகர் தில்லியில் நேற்று நடைபெற்றது.

அதில் ரஷ்ய தரப்பில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் செர்கெ ஷோய்கு மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரும்,

இந்தியா சார்பில் நமது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் புரிதல், ராணுவ ஒப்பந்தங்கள் ஆகியவை பற்றி நான்கு அமைச்சர்களும் பேசி கொண்டனர்.

அப்போது இந்திய சார்பில் வடக்கு எல்லையோரம் நடைபெறும் அத்துமீறல் முன்வைக்கப்பட்டது எனினும் நேரடியாக சீனாவை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது