4 நாள் சுற்றுபயணமாக தென் கொரியா சென்ற இந்திய விமானப்படை தளபதி !!

இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி 4 நாள் சுற்று பயணமாக தென் கொரியா சென்றுள்ளார்.

அங்கு அவர் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர், முப்படை தளபதி மற்றும் தென் கொரிய விமானப்படை தளபதி ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.பின்னர் முக்கிய ராணுவ தளங்களை ஆய்வு செய்து விட்டு 30ஆம் தேதி நாடு திரும்புகிறார் என விமானப்படை தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.