இந்திய விமானப்படையின் பலிஸ்டிக் ஏவுகணைகள் பாதுகாப்பு அமைப்பின் கட்டுமானம் ஆரம்பம் !!

PROJECT SWORDFISH என்ற பெயரில் இந்திய விமானப்படைக்கான பலிஸ்டிக் ஏவுகணைகள் பாதுகாப்பு அல்லது தடுப்பு அமைப்பின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்ட பணிகளில் 4 L அலைவரிசை கொண்ட LRTR அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன இவை பாகிஸ்தான் உடனான மேற்கு வான் பாதுகாப்பு பகுதியில் உள்ளன.

இரண்டாம் கட்டத்தில் இத்தகைய மேலும் 2 அல்லது 3 அமைப்புகள் நிறுவப்படும் இந்த கட்டுமான பணிகள் 2023ஆம் ஆண்டு நிறைவடையும் என கூறப்படுகிறது.

இது தவிர மேலும் 12 L அலைவரிசையில் இயங்கும் அதிக திறன் கொண்ட ரேடார்கள் பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிகளில் தலா 4 வீதம் மொத்தம் 8 ஆக நிறுவப்பட உள்ளன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.