ரஷ்ய R-73,இஸ்ரேலிய PYTHON-5க்கு பிறகு தேஜாஸில் இணையும் ஐரோப்பிய TYPHONN ஏவுகணை !!

  • Tamil Defense
  • December 30, 2021
  • Comments Off on ரஷ்ய R-73,இஸ்ரேலிய PYTHON-5க்கு பிறகு தேஜாஸில் இணையும் ஐரோப்பிய TYPHONN ஏவுகணை !!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நமது இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை பல்வேறு வகைகளில் மேம்படுத்தி அதன் திறன்களை வலுப்படுத்தும் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் பல்வேறு வகையான வெளிநாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களை தேஜாஸில் எந்தவித தடங்கலும் இன்றி இந்தியா இணைத்து வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் கூட்டு தயாரிப்பு திட்டங்களான சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான JF-7 மற்றும் ரஷ்ய இந்திய கூட்டு தயாரிப்பான FA-50 ஆகிய போர் விமானங்களில் இது சாத்தியமில்லை.

இந்தியா தனது தேஜாஸின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் அடுத்த வருடம் அதிநவீன குறுந்தூர வானிலக்கு ஏவுகணையான TYPHONNஐ (ASRAAM – Advanced Short Range Air to Air Missile) இணைக்க உள்ளது.

இந்த ஏவுகணை தான் தற்போது ஐரோப்பிய TYPHOON, அமெரிக்க F35 மற்றும் F18 ஆகிய போர் விமானங்களின் முதன்மையான WVR – Within Visual Range அதாவது பார்வைக்குள் இருக்கும் இலக்குகளை தாக்க பயன்படும் ஆயுதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருட ஆரம்பத்தில் இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் மற்றும் இங்கிலாந்தின் MBDA UK ஆகிய நிறுவனங்கள் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை இந்தியாவில் அமைக்க ஒப்பு கொண்டன என்பது கூடுதல் தகவல்.

2022-2023 ஆண்டு வாக்கில் இதற்கான பணிகள் துவங்கும் ஆக விரைவில் தேஜாஸ் போர் விமானம் மூன்று வெவ்வேறு WVR ரக ஏவுகணைகளை பயன்படுத்த உள்ளது என்பது சிறப்புமிக்க செய்தி ஆகும்.