
இந்தியா தனது எதிரிகளுக்கு எதிரான தனது எதிரப்பு திறன்களை வலுப்படுத்த ஹைப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்குவதில் வேகம் காட்ட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது ராணுவ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் மட்டுமே தங்களது எதிரிகளை வென்று சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் ஆகவே நாமும் எந்தவித சூழலையையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது இவற்றை அவர் தெரிவித்தார் மேலும் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ள தொழில்நுட்பங்களை நாம் பெற்று ராணுவ தொழில்நுட்பத்தில் இந்தியாவும் முன்னனி நாடாவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மேலும் பேசுகையில் நாட்கள் செல்ல செல்ல பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்புகளின் திறன்களும் அதிகரித்து வருவதாக மேலும் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிபடுத்த ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிப்பது ஒரு புரட்சிகரமான முடிவாகும் என்றார்.
கடைசியாக அவர் நாட்டு மக்களுக்கு ராணுவ படைகளின் நவீனமயமாக்கல் தொடரும் என உறுதியளித்தார் மேலும் DRDO, ராணுவம், தனியார் துறை மற்றும் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து முயற்சிகள் நடைபெறும் எனவும் உறுதியளித்தார்.