பலூச்சிஸ்தான் மற்றும் சிந்த் ஆகியவற்றின் விடுதலைக்கு இந்தியா உதவ வேண்டும் இந்தியா உடன் இணையவும் விருப்பம் எழுந்துள்ள கோரிக்கை !!

  • Tamil Defense
  • December 13, 2021
  • Comments Off on பலூச்சிஸ்தான் மற்றும் சிந்த் ஆகியவற்றின் விடுதலைக்கு இந்தியா உதவ வேண்டும் இந்தியா உடன் இணையவும் விருப்பம் எழுந்துள்ள கோரிக்கை !!

முத்தாஹிதா க்வாமி இயக்கத்தின் தலைவர் அல்தாஃப் ஹூசைன் ஐக்கிய நாடுகள் சபை இங்கிலாந்து மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஆகியவற்றிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் பலூச்சிஸ்தான் மற்றும் சிந்த் மாகாணங்களை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கொடுமைகளை அரங்கேற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்த இரண்டு மாகாணங்களை சேர்ந்த தலைவர்களும் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணாவத்தின் ஏஜேன்டுகளாக செயல்படுவதாகவும் அவர்கள் விலை போய் விட்டதாகவும்,

பலூச்சிஸ்தான் மற்றும் சிந்த் ஆகிய மாகாணங்களின் வளங்களை பாகிஸ்தான் அரசு மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை சுரண்டி கொழுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மேலும் இந்தியா இந்த இரண்டு மாகாணங்களின் விடுதலைக்கு உதவும் பட்சத்தில் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து இந்தியாவுடன் முன்னர் சிக்கீம் மாநிலம் இருந்ததை போல இணைய விரும்புவதாகவும் கூறினார்.

இவரின் இந்த பேச்சு சர்வதேச அரங்கில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.