சீனாவை கண்காணிக்க நான்கு இஸ்ரேலிய ட்ரோன்களை பெற்று கொண்ட இந்தியா !!

  • Tamil Defense
  • December 1, 2021
  • Comments Off on சீனாவை கண்காணிக்க நான்கு இஸ்ரேலிய ட்ரோன்களை பெற்று கொண்ட இந்தியா !!

இந்திய தரைப்படையின் திறன்களுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக நான்கு இஸ்ரேலிய ஹெரோன் ட்ரோன்கள் டெலிவரி செய்யப்பட்டு உள்ளன.

இவை நான்குமே கிழக்கு லடாக்கில் சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியை கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே படையில் உள்ள ஹெரோன் ட்ரோன்களை விடவும் இவை அதிநவீனமானவை எனவும் இவற்றின் ஜாம்மிங் எதிர்ப்பு திறன் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

இவற்றின் கொள்முதல் ராணுவத்திற்கு அரசு வழங்கிய சிறப்பு அதிகாரங்களின் கீழ் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் 21,000 கோடி ரூபாய் செலவில் அமெரிக்காவிடம் இருந்து 30 ப்ரடேட்டர் ட்ரோன்களை இந்தியா வாங்க உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.