
இந்தியா ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை ஒப்பந்தம் செய்த நிலையில் தற்போது 30 விமானங்கள் டெலிவிரி செய்யப்பட்டு விட்டன, மீதமுள்ள 6 விமானங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் டெலிவிரி ஆகிவிடும்.
இந்த நிலையில் ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான MBDA மீது இந்திய அரசு அபராதம் விதித்துள்ளது,அபராத தொகை ஏறத்தாழ ஒரு மில்லியன் யூரோக்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்த டெலிவிரி செய்யும் ரஃபேல் விமானங்கள் MBDA நிறுவனம் ஏவுகணைகளை தயாரித்து வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம் ஆகும் ஆனால் டெலிவிரி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.