
ஃபிலிப்பைன்ஸ் நாடு கடல்சார் ஹெலிகாப்டர்களை வாங்க தேர்வு நடத்தி வருகிறது.தற்போது இதில் ஏர்பஸ் மற்றும் இந்திய த்ருவ் ஹெலிகாப்டர்களுக்கு இடையே போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏர்பஸ் நிறுவனத்தின் panther AS565 மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் த்ருவ் ஆகியவை ஒரே விலை தான் ஆனாலும் சிறப்பான பராமரிப்பு மற்றும் இதர சேவை திட்டத்தை அறிவித்து ஈர்க்க முயற்சி செய்கிறது இந்தியா.

ஒப்பந்தத்தில் நமது த்ருவ் ஹெலிகாப்டர் வெற்றி பெறும் பட்சத்தில் சுமார் 3000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
