விமானங்களுக்கான ஜெட் என்ஜினை உருவாக்க உள்ள இந்தியா !!

  • Tamil Defense
  • December 1, 2021
  • Comments Off on விமானங்களுக்கான ஜெட் என்ஜினை உருவாக்க உள்ள இந்தியா !!

தற்போது நமது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜாஸ் போர் விமானத்தில் அமெரிக்க தயாரிப்பு ஜெட் என்ஜின் பயன்படுத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் எதிர்கால தேவைகளை கணக்கில் கொண்டு உள்நாட்டிலேயே விமானங்களுக்கான ஜெட் என்ஜினை தயாரிக்க இந்தியா முயன்று வருகிறது.

இதை ஒரு வெளிநாட்டு என்ஜின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை ஆம்கா, இலகுரக தேஜாஸ் ஆகியவற்றிற்காக தயாரிக்க உள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேஜாஸின் சக்தி தேவைகள் அதிகமாக உள்ள நிலையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காவேரி என்ஜினை தேஜாஸில் இணைத்து பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது ஆகவே முற்றிலும் புதிய சக்தி வாய்ந்த என்ஜின் ஒன்றை தயாரிப்பதே தீர்வாகும்.