நாகலாந்தில் இருந்து ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் நீக்கம் ? முக்கிய தகவல்கள்

  • Tamil Defense
  • December 26, 2021
  • Comments Off on நாகலாந்தில் இருந்து ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் நீக்கம் ? முக்கிய தகவல்கள்

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படைகள் சிறப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் இந்த சட்டத்தை பகுதியாக நீக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா மற்றும் நாகலாந்து முதல்வர் ரியோ ஆகியோருடனான சந்திப்பிற்கு பிறகு உள்துறை அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருவேளை ஆயுதப்படைகள் சட்டம் பகுதியாக நீக்கப்பட்டால் வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில பாதுகாப்பு படைகள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும் என அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த முடிவை அமித் ஷா அவர்களிடம் பிரதமரிடம் தெரிவித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. டிசம்பர் 31க்குள் இந்த முடிவு எடுக்கப்படும்.

சட்டத்திற்கு புறப்பானவர்களை தண்டிக்க படைகளுக்கு அதிக அளவிலான அதிகாரங்களை இந்த ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் உதவுகிறது.

மாநிலங்களின் கிராமப்புறங்களில் மட்டும் சட்டம் செல்லுபடியாகமல் செய்யவும் நகரங்களில் சட்டம் தொடரலாம் என ஒரு புறமும் , இந்தியா- மியான்மர் எல்லையில் மட்டும் சட்டத்தை செயல்படுத்த திட்டம் என ஒரு புறமும் கூறப்படுகிறது.