
ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் ஆஃப்கானிஸ்தானில் தங்களது தூதரகத்தை திறக்க முயன்று வருகின்றன.
அந்த வரிசையில் இந்தியாவும் மீண்டும் ஆஃப்கானிஸ்தானில் தனது தூதரகத்தை திறக்க பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்ந்து பரிசீலனை செய்து வருகிறது.
ஏற்கனவே அங்கு ரஷ்யா, சீனா, ஈரான், பாகிஸ்தான், கத்தார், துருக்கி, துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் அங்கு இயங்கி வருகின்றன . மேலும் அமெரிக்கா கத்தாரின் தூதரகத்தை பயன்படுத்தி வருகிறது.
இந்தியாவும் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை என முன்னர் கூறியதும் முன்னாள் ஆஃப்கன் அதிபர் கர்சாய் இந்தியா தூதரகத்தை திறக்க வேண்டுகாேள் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பழைய தூதரகத்தை திறக்கவா அல்லது ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் பிரதிநிதிகளை பணியமர்த்துவதா என இந்தியா தனது வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.
எப்படியும் இந்தியா தூதரகத்தை அங்கு திறக்கும் என்பது உறுதியாகி உள்ள நிலையில் மாஸ்கோ மற்றும் தோஹாவில் உள்ள தாலிபான் பிரதிநிதிகளிடம் இதுபற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.