400 ஃபிரெஞ்சு HAMMER குண்டுகளை வாங்க முடிவு; சீனா பாகிஸ்தானுக்கு குறி !!

இந்தியா சொந்தமாக தயாரித்து படையில் இணைத்து வரும் இலகுரக தேஜாஸ் போர் விமானங்களில் உள்நாட்டு ஆயுதங்கள் மட்டுமின்றி,

வெளிநாட்டு ஆயுதங்களையும் இணைத்து பயன்படுத்த உள்ளனர். அந்த வகையில் தற்போது அதிநவீனமான ஃபிரெஞ்சு தயாரிப்பான HAMMER தரை தாக்குதல் குண்டுகளை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றை கொண்டு சீன எல்லையோரம் நிறுவப்பட்டுள்ள MANDAT-B1E R-330UM ரக ஜாம்மர்கள் மற்றும் பிரங்கி தாக்குதல் நிலையங்களை தாக்கி அழிக்க முடியும்.

இந்த 250 கிலோ எடை கொண்ட HAMMER லேசர் வழிகாட்டபட்ட குண்டுகளை கொண்டு எந்தவொரு போரிலும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு மிக சிறப்பாக பாடம் புகட்ட முடியுமென்றால் அதுமிகையல்ல.