மேலதிக சுகாய்-30 எம்கேஐ விமானங்கள் வாங்க திட்டம்
1 min read

மேலதிக சுகாய்-30 எம்கேஐ விமானங்கள் வாங்க திட்டம்

ரஷ்யாவிடம் இருந்து மேம்படுத்தப்பட்ட 50 சு-30 எம்கேஐ விமானங்களை அனுமதி பெற்று இந்தியாவில் தயாரிப்பது குறித்து இந்தியா விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுகோய் சு-30 எம்கேஐ‌ என்பது ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இந்திய விமானப்படைக்கு இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உரிமத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இரட்டை என்ஜின் போர் விமானம் ஆகும்.இந்தியா தற்போது 272 விமானங்களை இயக்கி வருகிறது.

மேலும் நடைபெற்ற மற்றாரெு நிகழ்வில்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புனே விமானப் படை நிலையத்துக்குச் சென்றார். துடிப்பான வான் சாகச காட்சியை ஜனாதிபதி கண்டுகளித்ததுடன், விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். ஜனாதிபதி தனது விஜயத்தின் போது சு-30 எம்கேஐ முழு மிஷன் சிமுலேட்டரை இயக்கி பார்த்தார்.